Skip to main content

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்: 23 மீனவர்கள் கைது!

Published on 08/08/2017 | Edited on 08/08/2017
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்:
23 மீனவர்கள் கைது!



புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினம் மற்றும் ஜகதாபட்டினம் கடற்பகுதியில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மீனவர்களும் கடற்படை வீரர்கள் மீது எதிர்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களது 5 விசைபடகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.



மேலும் 16 விசைபடகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை வீரர் ஒருவரை கோட்டைபட்டினம் மீனவர்கள் சிறைபிடித்ததாகவும், பின் அவரை கரையை நோக்கி அழைத்து வந்த போது அவர்கள் வந்த படகு கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி, மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜ்  தலைமையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோட்டைபட்டினம் மீன்பிடி தளத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்