
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், அவர்களின் படகுகள், வலைகள் பறிமுதல் செய்யப்பட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 18 விசைப் படகுகளில் 9 விசைப் படகுகள் சேதமடைந்ததை அடுத்து, சேதமடைந்த 9 படகுகளை அழிக்க இலங்கையின் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் இந்த வழக்கில், எஞ்சிய 9 விசைப் படகுகளை விடுவிக்க தமிழ்நாடு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.