தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையம் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியை நடத்தவிருக்கிறது. அதன்படி தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் தமிழகத்திலுள்ள, அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகளை நடத்த இருக்கின்றது. இப்போட்டியை முனைவர் ஜெ. ஹாஜாகனி மற்றும் ஜெ. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர். அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆகியோர் இதற்கான அழைப்பை விடுத்துள்ளனர்.
கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் கலை மற்றும் அறிவியல். மருத்துவம், சட்டம், பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய பாடத்திட்டங்களைக் கடந்து மாணவர்கள் அறிந்தும், உணர்ந்தும் தெரிய வேண்டிய உன்னத விழுமியங்களை மாணவர்கள் மத்தியில் விதைத்திடவும், நமது மொழி, பண்பாடு, இலக்கியம், கலைகள், வரலாறு ஆகியவற்றின் புரிதல்களையும், இன உணர்வினையும் அவர்கள் பெற்றிடவும் இப்போட்டிகள் வழிவகுக்கும் என மாநில சிறுபான்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் கல்லூரிகள் தங்கள் நிறுவனத்தின் சார்பாக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டுக்கும் தலா இரண்டு மாணவர்களை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள்:
இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் தனித்தனியே பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என அவ்வாணையம் அறிவித்துள்ளது. மேலும், பரிசுகளையும் சான்றிதழ்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நடக்கவிருக்கும் விழாவில் நேரடியாக தருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்கவிருக்கும் மாணவர்கள் தங்களின் பெயர்களை கீழேகண்ட முகவரிகளுக்கு அனுப்பவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்னஞ்சல்:
smcelocution@gmail.com
அஞ்சல் முகவரி:
D. ரவிச்சந்திரன் IAS
உறுப்பினர் செயலாளர்,
மாநில சிறுபான்மையினர் ஆணையம்,
735, அண்ணா சாலை, எல்.எல்.ஏ.கட்டடம்,
3வது தளம்,
சென்னை - 600 002
மேலும், போட்டியில் பங்கேற்கும் மாணவர்களது மின்னஞ்சல், அஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் அனுப்பப்பட வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகள் பற்றிய அனைத்து தகவல்களும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சார்ந்த நிறுவனங்களுக்கும், மாணவர்களுக்கும் தனித்தனியாக அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.