Published on 30/03/2025 | Edited on 30/03/2025

அண்மையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு காத்திருந்தவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கோடைகால தாக்கத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் சிறப்பு தரிசனத்தை ரத்து செய்வதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வாரத்திற்கு மூன்று நாட்கள் சிறப்பு தரிசனம் இதற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை ஆகிய மூன்று தினங்களிலும் சிறப்பு தரிசனம் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்ப்பதற்காகவும் இதனால் ஏற்படும் இடையூறுகள் சிக்கல்களை களைவதற்காகவும் சிறப்பு தரிசனத்தை ரத்து செய்திருப்பதாக திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.