
அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில்,''பொய் பிரச்சாரத்திற்கு செட் செய்யப்பட்டவர் தான் தமிழக பாஜக தலைவர். திடீரென ஒரு ஆடு வந்து சம்பந்தமே இல்லாம எங்க தலைவரை பார்த்து, அவரது தொழிலை வைத்து பேசுகிறார். பெண்ணை பற்றி தரக்குறைவாக பேசும் ஒருவரை தலைவராக வைத்திருக்கும்போதே முடிவாகி விட்டது பாஜக எந்த அளவிற்கு இருக்கிறது என்று.
தமிழிசை, வானதி அக்கா எல்லாருக்கும் தெரியும் அந்த தலைவரைப் பற்றி. திமுகவிற்கு எதிராக அண்ணா யுனிவர்சிட்டி பிரச்சனைக்கு மக்கள் எல்லாம் குரல் கொடுக்கும் பொழுது திடீரென ஒருவர் சட்டையை கழட்டி சாட்டையால் அடித்துக் கொள்கிறார். என்னடா அரசியல் பண்றீங்க. யாருக்காக இந்த அரசியல். பாவம் மோடி டெல்லியில் உட்கார்ந்து கொண்டு நமக்காக ஒரு பையன் சாட்டையில் அடித்துக் கொள்கிறான், நமக்காக கத்தி கொண்டிருக்கிறான், வேலை செய்து கொண்டிருக்கிறான் என நினைக்கும் போது வியூக வகுப்பாளர்கள் பாஜக தலைவரையே கரெக்ட் செய்து விட்டார்கள்'' என பேசியிருந்தார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துக்கு லாட்டரி மாட்டின் மகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைத்தள பக்கத்தில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வெளியிட்ட பதிவில், 'பாஜக தலைவர் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசிய வார்த்தைகளுக்கு தான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் தந்தை பணத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டு எங்கள் குடும்பத்திற்கு ஆதவ் அர்ஜுனா அவப்பெயர் ஏற்படுத்துகிறார். அருடைய கருத்திற்கும் எங்கள் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என தெரிவித்துள்ளார்.