
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ளது ஊர்கொண்டபேட்டா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அனுமன் கோயிலுக்கு கடந்த 29 ஆம் தேதி 30 வயது இளம் பெண் ஒருவர் சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார். பிறகு சாமி தரிசனம் செய்த அந்த பெண் உறவினர்களுடன் அனுமன் கோயிலிலே இரவு தங்கியுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அந்த பெண் இயற்கை உபாதை கழிப்பதற்காக கோயிலுக்கு அருகே உள்ள இடத்திற்கு தனியாகச் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று இளம் பெண்ணை அருகே உள்ளே முட்புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது அருகே உள்ள மரத்தில் பெண் கட்டப்பட்டு காயங்களுடன் கிடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உறவினர்கள் வருவதைப் பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது.
இதுகுறித்து பெண்ணின் தரப்பில் இருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவத்திற்கு காரணமான 8 பேரில் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதேசமயம் தலைமறைவாக உள்ள மேலும் 2 நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.