Skip to main content

விலகத் தொடங்கியது தென்மேற்கு பருவமழை

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

Southwest Monsoon began to depart

 

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் வரும் செப்டம்பர் 28, 29 ஆகிய இரண்டு நாட்களில் ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

அறிவிப்பின்படி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சியில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

அதேநேரம் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் செப்.17ஆம் தேதி பருவமழை விலக தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு 8 நாட்கள் தாமதமாக விலகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்