Skip to main content

தனுஷ்கோடியின் எச்சங்களை கபளீகரம் செய்யும் சமூக விரோதிகள்.!!

Published on 28/08/2018 | Edited on 28/08/2018
ssd


ஆழிப்பேரலையால் அழிந்துப் போன தனுஷ்கோடியின் மிச்ச, சொச்ச எச்சங்களை பாதுகாக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த காலங்களில் தூங்கநகரமகவும், குட்டி சிங்கப்பூராகவும் விளங்கிய தனுஷ்கோடி 1964 டிசம்பர் 24-ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக ஏற்பட்ட பேரலையால் இந்திய வரைபடத்தில் இருந்து துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து தனுஷ்கோடி பகுதியில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற பகுதி இல்லை என மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில் 50 ஆண்டுகள் கடந்த பின், தற்போது அப்பகுதியில் 50 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டதால் தினந்தோறும் அரிச்சல்முனை பகுதி 2 கடல் சேரும் அழகையும், பேரலைகள் விட்டுச்சென்ற கட்டிடக்கலையையும் பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி பகுதிக்கு வருகின்றனர்.

இந்நிலையில், கடல் விட்டுச்சென்ற கட்டிடங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்காக பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முந்தைய மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்ததுடன், அப்பகுதியில் இருந்த கடைகளை அகற்றியும், கட்டிடங்கள் இருக்கும் நிலங்களை சுற்றிலும் கம்பிவேலி கொண்டும் பாதுகாக்க அரணாக அமைத்தார். தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாததால், பவளப்பாறைகளால் கட்டப்பட்ட தேவாலயத்திலிருந்து பாறைகள் அகற்றப்பட, பலத்த காற்று மழை பெய்தாலே இடிந்து விழும் அபாயத்தில் சில கல்கள் மட்டுமே அந்த தேவாலயத்தை தாங்கிப் பிடித்து உள்ளது.

மேலும் போலீஸ் உதவியுடன் அகற்றப்பட்ட கடைகள் இரண்டு மடங்காக புற்றீசல் போல் அதிகரித்து இப்பகுதியின் அழகை முற்றிலும் மறைத்துள்ளது. அழகினைக் கண்டுகளிக்கும் சுற்றுலாப் பயணிகளோ., " அழியும் நிலையில் உள்ள கட்டிடங்களை பாதுகாத்து வருகின்ற தலைமுறைக்கு தனுஷ்கோடியின் கடந்த கால வரலாற்றை எடுத்துக் கூறும் விதமாக பாதுகாக்க வேண்டும்." என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்