Skip to main content

'நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்' - தமிழக அரசு அரசாணை!

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

'Small grains in rations now' - Government of Tamil Nadu!

 

நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்களை விற்பனை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

நியாயவிலைக் கடைகளில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து சிறுதானியங்கள் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கேழ்வரகு, கம்பு, ராகி, தினை, சாமை, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சிறு தானியங்கள் நியாயவிலைக்கடைகளில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக சென்னை, கோவை மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைப்பதோடு, சிறுதானியங்களின் மதிப்பை கூட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்