திருவாசகம் தந்த ஆவுடையார்கோயில் பற்றிய வரலாற்று ஆய்வு நூலில் ஆசிரியர் ஆ.பத்மாவதி பல இடங்களில் தவறான பதிவுகளை செய்துள்ளார் என்றும் அந்த நூலை நிறுத்த வேண்டும் திருத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு நூல் ஆசிரியர், பதிப்பகத்தாருக்கு எதிராக திருப்பெருந்துறை சிவபெருமானிடம் விண்ணப்பம் கொடுக்கும் விதமாக சிவபக்தர்கள் கோயில் வளாகத்தில் உண்ணாவிரப் போராட்டம் தொடங்கியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி பல நாடுகளில் உள்ள சிவபக்தர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்து மக்கள் கட்சி ஆர்ச்சுன் சம்பத் மற்றும் அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. அந்த நூலில் இது சாஸ்தா கோயில் என்றும் சிவன் கோயில் இல்லை என்றும் மாணிக்கவாசகர் திருமணம் செய்துகொண்டவர், பிற்கால கோயிலாக உள்ளது என்றும் ஆய்வுகள் சொல்வதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ள பிவுகள் தவறானது. தவறான பதிவுகளை நீக்க வேண்டும் என்றும் தவறான பதிவுகளுக்கு கல்வெட்டு மற்றும் பல சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் போராட்டத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
மேலும் நாகை மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நூல் ஆசிரியர் மற்றும் பதிப்பகத்தார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் முதல் அடையாளப் போராட்டம் தான் பிழைகள் திருத்தப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டங்கள் நடக்கும் என்றனர்.