Published on 24/05/2019 | Edited on 24/05/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணியும், மாநிலத்தில் திமுக கூட்டணியும் அதிக இடங்களை கைப்பற்றியது. தமிழகத்தில் திமுக கூட்டணி 51.46% ஓட்டுக்களை பெற்றுள்ளது.அதில் திமுக 32.76%,காங்கிரஸ் 12.76%,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2.40%,இந்திய கம்யூனிஸ்ட் 2.43%,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1.11% மற்றும் சில கூட்டணி கட்சிகளின் சதவிகிதம் எல்லாம் சேர்ந்து 51.46% வாக்குகளை திமுக கூட்டணி பெற்றுள்ளது.
அதிமுக கூட்டணியில் அதிமுக 18.48%,பாமக 5.24%,பிஜேபி 3.66%,தேமுதிக 2.19% ஆக அதிமுக கூட்டணியில் 29.57% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர்.மேலும் மக்கள் நீதி மய்யம்,நாம் தமிழர் கட்சி, அமமுக மற்றும் சில சுயேட்சைகள் எல்லாம் சேர்ந்து 17.11% வாக்குகளை பெற்றுள்ளனர்.கடந்த முறை விட இந்த முறை நோட்டாவிற்கு கம்மியான வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.இந்த முறை நோட்டாவிற்கு 1.28% பேர் மட்டுமே போட்டுள்ளனர்.இதில் திமுகவிற்கு கடந்த முறை விட இந்த முறை அதிகமான சதவிகிதம் பெற்றுள்ளனர்.மேலும் அதிமுகவிற்கு கடந்த முறையை விட இந்த முறை 15% குறைவாக பெற்றுள்ளனர்.