மருத்துவமனையில் எம்எல்ஏ உள்ளிருப்பு போராட்டம்
குமரி கருங்கல் அரசு மருத்துவமனைக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நேற்று காலை சென்றார். அப்போது, உள்நோயாளிகளுக்கு பால், பிரட் வழங்காததும், ஒரே ஒரு டாக்டர் இருந்ததையும் அறிந்தார். இதையடுத்து ராஜேஷ்குமார், தொண்டர்களுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் தலைமை மருத்துவ அதிகாரி சதீஷ் வந்தார். அப்போது, சமையல் பொருட்கள் வராததால் உணவு வழங்கமுடியவில்லை. பழைய டெண்டரை ரத்துசெய்து, புதிய டெண்டர் பெற்று, தடையில்லாமல் உணவு வழங்கப்படும் என்று கூறினார். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.