கரூர் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த மொத்த விற்பனை கடை, மளிகை கடை, உணவகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உழவர் சந்தை பகுதியில் செயல்பட்டுவரும் பிரபல பிரியாணி கடை ஒன்று சட்டவிரோதமாக சாலையை 10 அடி வரை ஆக்கிரமிப்பு செய்து, சுகாதாரம் இன்றி உணவு தயாரித்தல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்த காரணங்களுக்காக மாநகராட்சி அதிகாரிகளால் பூட்டு போடப்பட்டது.
அப்போது மாநகர் நல அலுவலர் லட்சியவர்ணா உள்ளிட்ட சுகாதார ஆய்வாளர்கள் குழுவினருடன் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மேலும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட செய்தியாளர்களிடம் பிரியாணி கடை ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.