டெங்கு பாதிப்பில் வேலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முக சுந்தரம் வெளிப்படையாக பேசி டெங்கு குறித்த கவலையை பகிர்ந்துக்கொண்டார்.
வேலூர் மாவட்ட ரெட்கிராஸ் சார்பில், கருவேல மரம் அகற்றம், டெங்கு விழிப்புணர்வு, ஹெல்மெட் அவசியம் குறித்து இருசக்கர பேரணி ஏற்பாடு செய்துயிருந்தது. இதில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சில் கலந்துக்கொண்டு பேசிய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் "கருவேல மரங்களை பொதுமக்கள் பங்களிப்புடன் இந்த மாவட்டத்தில் பெரும்பான்மையானவற்றை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது. டெங்கு பாதிப்பில் இந்த மாவட்டம் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. டெங்குவை தடுக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வும், ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் சுகாதார பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பொதுமக்கள் ஒத்தொழைப்பு இருந்தால் மட்டும்மே டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முடியும்" என்றார்.
டெங்கு கொசுவை பரப்புவதற்கு காரணமான தனியார் பள்ளிக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது வேலூர் மாவட்டத்தில் அதேபோல், ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குநர் பழனிச்சாமி, நெமிலி ஒன்றியத்தில் ஆய்வு பணிகள் மேற்க்கொண்டபோது, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், பணியாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களோடு இணைந்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்தல் மற்றும் விழிப்புணர்வில் தீவிர கவனம் செலுத்தவேண்டும், அதில் கவனம் செலுத்தாத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்.