சென்னை சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், அவர் மீது மூன்று போக்சோ வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் பதிவு செய்தனர். பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மீது, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
அதேபோல், பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடமும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில்,சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரியான சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. குணவர்மன், சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்புத்துறைத் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.