சசிகலா மீதான வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு
எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணை வருகிற 29-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
சசிகலா மீதான அன்னிய செலாவணி வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவை சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது. இதன்பின்னர் இந்த வழக்கில் மத்திய அமலாக்கப்பிரிவு தரப்பின் சாட்சிகளை சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும்.
இதற்காக இந்த வழக்கு நீதிபதி ஜாகீர் உசேன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கப்பிரிவு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.