இரண்டாயிரம் எஸ்.சி, எஸ்.டி மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொதகை மற்றும் ஐநூறு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க வேண்டும் என்று கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அரசு உதவிபெறும் எச்.என்.யூ.பி.ஆர்.பெண்கள் மேல்நிலை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளாக படித்து முடித்த மற்றும் தற்போது படித்து வருகிற தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவியர்கள் 2 ஆயிரம் பேர்களுக்கு கல்வி உதவி தொகை கிடைக்கவில்லை. திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-18 மற்றும் 2018 -19 ஆகிய கல்வியாண்டுகளில் பயின்று பள்ளியிலிருந்து வெளியேறிய 500 மாணவர்களுக்கு இதுவரை லேப்டாப் வழங்கவில்லை.
மாணவர்கள் தற்போது தாங்கள் பயிலும் கல்லூரிகளில் லேப்டாப் இன்றி சிரமப்படுகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பிற்பகல் ஒரு முறை மட்டுமே பேருந்து விடப்படுகிறது. அடுத்த பேருந்துக்காக மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. இக்கல்லூரியில் பெண்கள் அதிகம் படிப்தால் அவர்களுடைய பாதுகாப்பைக் கருதிட வேண்டும். மாணவர்கள் பேருந்துகளில் தொங்கிக்கொண்டு பயணிக்க வேண்டிய நிலை உருவாகி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காலை, பிற்பகல் ஆகிய 2 வேலைகளிலும் இரு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கிட வேண்டும் எனவே கலெக்டர் விஜயலட்சுமி மேற்கண்ட கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனு கொடுத்தனர்.
இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் முகேஷ், மாநிலத் துணைச் செயலாளர் பொன்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.