திருவாரூர் அதிமுக மாவட்ட பொருளாளர் வீட்டில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகிருந்தால் இரண்டாயிரம் அபராதம் விதித்துள்ளார் மாவட்ட வருவாய் அதிகாரிகள்.
திருவாரூர் மாவட்டத்தில் மர்ம காயச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் தற்போது தீவிரமடைந்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். நேற்றைய தினம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 40-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு 3 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்கு தடுப்பு பணிகள் மாவட்ட முழுவதும் குழுக்கள் அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவாரூர் நகர் பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி தலைமையில் நடைபெற்ற டெங்கு தடுப்பு பணியின் போது அதிமுக மாவட்ட பொருளாளரும், மறைந்த திமுக தலைவர் கலைஞரை கடந்த 2016-ம் ஆண்டு எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளருமான ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கலவை இயந்திரத்தில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுகள் உற்பத்தியாகி இருந்ததது. அதனை தொடர்ந்து அங்கு இருந்த டயர்களிலும் தண்ணீர் தேங்கி டெங்கு கொசுகள் உற்பத்தியாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியாகினர்.
இதனையடுத்து அவருக்கு ரூ2ஆயிரம் அபராதம் விதித்து மாவட்டவருவாய் அலுவலர் சக்திமணி உத்தரவிட்டார். ஆனால் பன்னீர்செல்வமோ அபராதம் கட்ட முடியாது என கூறிய மறுத்துவிட்டார், பிறகுபணம் கட்ட நோட்டீஸை அதிகாரிகள் வழங்கி சென்றனர்.
இதனை தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்றது. இதே போன்ற மாவட்ட முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு குழுக்கள் டெங்கு தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக தலைமையிலான எடப்பாடி அரசோ டெங்குவை கண்டு அஞ்ச வேண்டாம், அதற்கான எல்லாவித முன்னேற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் செய்துவருவதாக வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் காய்ச்சலால் வரும் மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகளோ, படுக்கை வசதிகளோ இல்லாமல் மக்கள் பீதியில் உறைந்திருக்கும் நிலையில், அதிமுகவின் மாவட்ட பொறுப்பில் இருப்பவர், அதுவும் எம்.எல்.ஏ விற்கு போட்டியிட்டவர் வீட்டிலேயே அதிக கொசு உற்பத்தியாகியிருப்பது பொதுமக்கள், அதிகாரிகள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சிகலந்த பீதியை கிளப்பியுள்ளது.