பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: இணையத்தில் வெளியிட்ட நிறுவன உரிமையாளர் கைது
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லையில் உள்ள எல் அண்டு டி நிறுவனத்துக்கு சொந்தமான புறவழிச்சாலை துவங்கும் இடத்தில் உள்ளது நீலம்பூர் கிராமம்.
இந்த ஊரில், வெளிநாட்டு மெத்தைகளை வாங்கி உள்ளூரில் விற்பனை செய்யும் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சேலம் மாவட்டம், மேட்டூர் அருகிலுள்ள ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது-34) என்பவரும், கோவை மாவட்டம், வடவள்ளியைச் சேர்ந்த பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு உரிமையாளர் கார்த்திகேயன் பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அதை தந்து செல்போன் மற்றும் நிறுவனத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தில் வேலை செய்த பெண் ஒருவர் சூலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார்த்திகேயனைக் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிவசுப்பிரமணியன்