கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் காவல்நிலைய பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக, அண்ணாமலை நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் தகவல் வந்தது. இதையடுத்து, ஆய்வாளர் தேவேந்திரன் மற்றும் போலீசார், வீரன் கோவில் திட்டு, பெரிய காரைமேடு, கவரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமான சோதனை நடத்தினர்.
இதில் பெரிய காரைமேடு கிராமத்தைச் சேர்ந்த வினோத் வயது 29, பார்த்திபன் வயது 30, ராஜதுரை வயது 28, சின்னையன் என்கிற மாரியப்பன் வயது 37, கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம் வயது 38, குற்றியாறு என்கிற செல்வகுமார் மற்றும் வீரன் கோயில் திட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் வயது 38 ஆகிய ஏழு பேர் கள்ளசாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 840 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.