கோவையில் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,
நில உரிமையாளர்களும், விவசாயிகளும் 8 வழி சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள போதிலும் அதை கண்டு கொள்ளாமல் அவர்களின் நிலங்களை அபகரிப்பதையே நோக்கமாக உள்ளனர். 8 வழிச்சாலை அமைப்பது தேவையற்றது. இந்த எடப்பாடி பழனிசாமி அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் அவை தனியாருக்கு சாதகமாகவே உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் ஏராளமான பணிகள் முடங்கி உள்ளன. உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து வழக்குகள் எதுவும் இல்லை. அப்படியிருக்கும் போது உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைத்தது ஏன்?. கூட்டுறவு சங்க தேர்தல் கூட நியாயமாக நடைபெற வில்லை. தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தலை அறிவித்து அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதால் அது நிலுவையில் உள்ளது.
எனவே உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் என எந்த தேர்தலாக இருந்தாலும் அதை சந்திக்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை. கோவை மாநகராட்சியில் தற்போது சீரான குடிநீர் வினியோகம் உள்ளது. ஆனால் 24 மணி நேர குடிநீர் திட்டம் என்று கூறி குடிநீர் வினியோகத்தை வெளிநாட்டு தனியார் நிறுவனத்துக்கு வழங்குவது ஏன்?. இது தேவையற்றது. இவ்வாறு கூறினார்.