Published on 21/05/2020 | Edited on 21/05/2020

சென்னை குன்றத்தூர் பகுதியில் நேற்று இரவிலிருந்து மின்வெட்டு ஏற்பட்டதால் ஊரடங்கு நேரத்தில் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோல் லோ-வோல்டேஜ் காரணமாகவும் பொதுமக்கள் அவதியுற்றனர்.
ஒரு பக்கம் ஊரடங்கு உத்தரவு மறுபுறம் கோடை வெயில் என்ற நிலையில், மின்வெட்டால் வீட்டில் இருக்கும் மக்கள் வியர்வை போன்ற பல நெருக்கடிகளுக்கு ஆளாகினர். அதேபோல் இன்றும் பல முறை மின்வெட்டு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் மேலும் அவதியுற்று வருகின்றனர்.