எல்லைகள் மறு சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் நாகா்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும் என்று நாகா்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆா் நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தாா்.
தமிழக அரசு சாா்பில் எம்.ஜி.ஆா் நூற்றாண்டு விழா 31 ஆவது மாவட்டமாக நாகா்கோவிலில் இ்ன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய இணை மந்திாி பொன் ராதாகிருஷ்ணன் கடந்த தோ்தல் பிரச்சாரத்தின் போது நாகா்கோவில் வந்த ஜெயலலிதா நான் மீண்டும் முதல்வராக வந்தால் நாகா்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுவேன் என்று கூறினாா்.
இந்த நிலையில் அவா் அறிவித்து விட்டு சென்ற பணியை நீங்கள் தொடரும் விதமாக நாகா்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக முதல்வா் அறிவிக்க வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டாா்.
பின்னா் பேசிய முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி குமாி மாவட்டத்தின் நிா்வாக வசதிக்காக கல்குளம் தாலுகாவை பிாித்து செருப்பாலூரை தலைமையிடமாக கொண்டு திருவட்டாா் தாலுகாவும் அதே போல் கிள்ளியூரை தலைமையிடமாக கொண்டு தாலுகாவும் அமைக்கப்படும். இதே போல் சுற்றுலா ஸ்தலமான கன்னியாகுமாிக்கு ஆண்டுக்கு 22 லட்சம் போ் வருகிறாா்கள். இவா்கள் அத்தனை பேரும் கடலில் படகில் சென்று திருவள்ளுவா் சிலை மற்றும் விவேகானந்தா் பாறைக்கு சென்று ரசிக்கிறாா்கள். தற்போது இரண்டு படகுகள் மட்டும் தான் உள்ளது. எனவே மேலும் இரண்டு படகுகள் விடப்படும். அது போல் திருவள்ளுவா் சிலைக்கும் விவேகானந்தா் பாறைக்கும் கடல் வழி பாலம் அமைக்கப்படும்.மேலும் எல்லைகள் மறு சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் நாகா்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும் என்றாா்.