கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மருங்கூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் - ஜமுனா தம்பதியரின் மகள் சுடர் (10). இவர் தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தெரிந்த புராஜக்ட் வொர்க் செய்து வர வேண்டும் என்று ஆசிரியர் கூறியுள்ளார். அதற்காக அம்மாணவி தனது அப்பாவின் மொபைலின் மூலம் இணையளத்தின் வழியாக, ப்ராஜெக்ட் வொர்க் குறித்து தேடி உள்ளார். அப்போது எளிமையாக பென்சில் மூலம் டார்ச் லைட் செய்வது குறித்து, வீடியோவை பார்த்து, அதற்கு தேவையான பொருட்களான பென்சில், பிளேடு, பேட்டரி, ஒயர் உள்ளிட்டவைகளை, அவரது அப்பாவின் உதவியுடன் வாங்கி உள்ளார். அவற்றினை கொண்டு டார்ச் லைட் செய்து எரிய வைத்துள்ளார்.
"டார்ச் லைட் செய்யும் முயற்சியில் ஈடுப்பட்ட போது கடினமாக தெரிந்ததாகவும், அதனால் வீடியோவை பார்த்துக் கொண்டே செய்ததாகவும் கூறிய சுடர், இதேபோல் பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் என்றும், தன்னை போல் அனைவரும் ஊக்கத்துடன் செயல்பட்டால், வெற்றி பெறலாம் என்று கூறினார்.
டார்ச் லைட்டை முழுவதுமாக செய்து முடித்த பின், பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் காட்டிய போது, மாணவ, மாணவிகள், தலைமையாசிரியர் உட்பட அனைவரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
மேலும் சிறு வயதில் விசித்திரமான முயற்சியில் ஈடுப்பட்டதற்கும், சிறப்பாக மென்மேலும் பல விதமாக செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.