![SCOOTY AND BIKE INCIDENT IN SALEM DISTRICT POLICE INVESTIGATION](http://image.nakkheeran.in/cdn/farfuture/8vmlYswL3GNFkY1ZpnK3zJJfSQ_UvoTt8NUtTAXFXK4/1639320011/sites/default/files/inline-images/BIKJE3333.jpg)
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே நெடுஞ்சாலையைக் கடக்க முயனற இரு சக்கர வாகனம் மீது பைக் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்தனர்.
கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்த பாலன் தனது மனைவி சவுமியா, மகன் சந்தோஷுடன் மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டிருந்தார். இவர் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சந்தைதடம் என்ற இடத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம், பாலன் சென்ற ஸ்கூட்டி மீது மோதியது. இதில் பாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த பாலன் மற்றும் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிறுவன் சந்தோஷ் மற்றும் விபத்தை ஏற்படுத்திய ரெட்டியூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து, தீவட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.