அண்ணாமலை பல்கலைகழக பொறியியல் புல மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையில் கௌரிக்கப்பட்ட அறிவியலாளர்களின் ஆய்வு கட்டுரைகள் சம்பந்தபட்ட நுணுக்கமான கருத்துகளை மாணவர்கள் மத்தியில் வெளிக்கொணர்வதற்கான விழிப்புணர்வு தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவை பல்கலைகழகத்தின் துணைவேந்தர் முருகேசன் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக அறிவியல் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு செயற்கைகோள்களின் செயல்பாடு மற்றும் சமீபத்திய வளர்ச்சி பற்றி எளிய முறையில் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் தகவல் தொடர்பு துறை மாணவர்கள் படிப்பை முடித்து அவர்கள் எவ்வாறு அடுத்தகட்டத்திற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். செயற்கைகோள் அனுப்புவது எவ்வாறு அதன் பணிகள் எப்படி வகைபடுத்தபடுகிறது. விண்வெளியில் செலுத்தப்படும் செயற்கைகோள்கள் திரும்ப பெறப்படுமா? என மாணவர்களின் கேள்விகளுக்கு எளிய முறையில் பதில் அளித்தார்.
முன்னதாக பொறியியல் புல முதல்வர், முனைவர் ரகுகாந்தன் வரவேற்றார். பதிவாளர் கிருஷ்ணமோகன், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையின் தலைவர் யமுனா ஆகியோர் மாணவர்கள் மத்தியில் பேசினார்கள். அறிவியல் புல முதல்வர் கபிலன் பொறியியல் புலத்தின் பல்வேறு துறையின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவினையொட்டி மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி, சிறப்பு விரிவுரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை மூலம் 4 நாட்கள் நடைபெற்றது. துணைப் பேராசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். துணை பேராசிரியர் காயத்ரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.