செப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என்று குறித்து வரும் 20ம் தேதி முடிவு செய்யப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் நீண்ட நாட்களாக பள்ளிக்குச் செல்லமுடியாமல், ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களைப் படித்து வருகிறார்கள்.
தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதால் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகள் திறப்பு பற்றி இன்று ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பிறகு பேசிய அமைச்சர், "செப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகளைத் திறப்பது குறித்து வரும் 20ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.