ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தைச் சேர்ந்த கிருபாராணி திருவாடானை காவல்நிலையத்தில் பணிபுரிகிறார். நேற்று இரவு திருப்பத்தூரில் இருந்து மானாமதுரை சென்ற அரசு பேருந்தில் சிவகங்கையில் இரவு 10 மணிக்கு ஏறியுள்ளார். சீருடையில் இல்லாமல் இருந்ததால் கண்டக்டர் முருகானந்தம் டிக்கெட் எடுக்க சொல்லியுள்ளார். கிருபாராணி டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்துள்ளார். பின் நீண்ட விவாதத்திற்கு பின் டிக்கெட் எடுத்துள்ளார்.
கிருபாராணி டிக்கெட் விவகாரம் குறித்து மானாமதுரை எஸ்ஐ வாசிவத்திடம் போனில் புகார் செய்துள்ளார். இரவு 11 மணிக்கு பயணிகளை இறக்கி விட்டு பணி முடிந்து பேருந்தை மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பணிமனையில நிறுத்தி விட்டு அங்கு உள்ள ஒய்வு அறையில் நடத்துனர் முருகானந்தம் ஒட்டுனர் செந்தில் குமார் ஆகியோர் தூங்கினர். தூங்கிய கொண்டு இருக்கும் போது மானாமதுரை எஸ்ஐ வாசிவம் தலைமையிலான போலீஸார் பணிமனைக்குள் சென்று இரண்டு பேர்களையும் பிடித்து அடித்து மானாமதுரை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
தகவலறிந்து போக்குவரத்து வரத்துத்துறை அதிகாரிகள் காவல்நிலையத்திற்க்கு சென்று போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு பேரையும் கூட்டி சென்று மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் போக்குவரத்து ஊழியர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.