Published on 30/08/2018 | Edited on 30/08/2018

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ம.குன்னத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளி. இப்பள்ளியின் தலைமையாசிரியர் கண்ணன் மற்றும் சக்திவேல் முருகன், வரதராஜன், முத்துபாண்டி, சுபாஷ் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு பிளாஸ்டிக்கின் தீமைகளை கூறி விளக்கினர்.
மேலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணவர்வை அக்கிராம பொதுமக்களுக்கு ஏற்படுத்த திட்டமிட்டனர். அதன்படி, மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் இல்லாமல் மாசில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற வாசகங்கள் முழங்கத் பிளாஸ்டிக்கின் தீமைகளை கூறி குன்னத்தூர் முக்கிய வீதிகள் வழியாக சுற்றி ஊர்வலமாக வந்தனர். மாணவ மாணவிகளுடன் பள்ளி ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.