Published on 01/08/2022 | Edited on 01/08/2022

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரியில் அதிக மழை பொழிந்து வருவதால் அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்புப் படையினர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை எனக் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.