Skip to main content

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை- நீதிமன்றத்தில் 'லத்தி' ஒப்படைப்பு!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

SATHANKULAM ISSUES MADURAI DISTRICT COURT

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ்- மகன் பென்னிக்ஸ் மரண விவகாரம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. குழு இன்று மதுரை வருகிறது. பின்பு ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையிலான குழு மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக வெளியாகியுள்ளது.

 

இதனிடையே சாத்தான்குளம் தந்தை- மகன் மரணம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து மதுரை முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. 

 

அதைத் தொடர்ந்து தந்தை- மகன் சித்ரவதையின் போது பயன்படுத்தப்பட்ட 'லத்தி' உள்ளிட்ட பொருட்களும், வழக்குத் தொடர்பான தடயங்களும் மதுரை மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.  

 

 

சார்ந்த செய்திகள்