Skip to main content

சாத்தான்குளம் சம்பவம்... கைது செய்யப்பட்டவர்கள் அதிரடி சிறை மாற்றம்!!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020
Sathankulam incident: The arrested persons transferred to Madurai prison

 

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் பேரூரணி சிறையில் இருந்து மதுரை சிறைக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வந்துள்ளது. 

சாத்தான் குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் காவல்நிலைய போலீசார் சித்ரவதை செய்து தாக்கியுள்ளனர். இதில் மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீசார் அடித்தே கொன்றுள்ளனர் என்று சாத்தான்குளத்தில் அவர்களது உறவினர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி, சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையை அடுத்து காவல் அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Sathankulam incident: The arrested persons transferred to Madurai prison


சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சித்ரவதைக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முத்துராஜ் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜை வரும் 17-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கில் கைது எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது. 

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 5 பேரும் மதுரை சிறைக்கு அதிரடியாக  மாற்றப்பட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்