தமிழகத்தில் நான்கு தீவரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், முக்கிய தலைவர்களை தாக்க சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக செய்தலி நவாஸ் மற்றும் அப்துல் சமீம் என்ற பெயர்களை குறிப்பிட்டுள்ள உளவுத்துறை, அதில் செய்தலி நவாஸ் நாகா்கோவில் அருகே இளங்கடை பகுதியிலும் அப்துல் சமீம் திருவிதாங்கோட்டிலும் பதுங்கியிருப்பதாக கூறியுள்ளது. மேலும் அவர்களின் செல்போன் மற்றும் சிம் கார்டு உட்பட அனைத்து உதவிகளையும் இளங்கடையை சோ்ந்த தவ்ஃபீக் செய்து வருவதாக கூறியுள்ளது.
இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தீவிரவாத தடுப்பு பிரிவான எஸ்.ஐ.யூ பிரிவு டிஎஸ்பி சுப்பையா தலைமையிலான எஸ்.ஐ.யூ.-வினா் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில் நேற்று இளங்கடையில் உள்ள தவ்ஃபீக்கின் வீட்டில் டிஎஸ்பி சுப்பையா தலைமையில் எஸ்.ஐ.யூ.-வினா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது வீட்டில் தவ்ஃபீக்கின் மனைவி மட்டும் தான் இருந்துள்ளார். அவரிடமிருந்து இரண்டு செல்போன் மற்றும் ஒரு லேப்டாப்பை எஸ்.ஐ.யூ.-வினர் கைபற்றியுள்ளனர்.