மத்திய அரசின் திட்டங்களின் கண்காணிப்பு குழுவின் சேர்மேன் ஆக இருப்பவர் தூத்துக்குடி அதிமுக எம்.பியான நட்டர்ஜி. துணை சேர்மேனாக இருப்பவர் அதிமுக எம்.பி சசிகலாபுஷ்பா, இன்று காலை ,மத்திய அரசின் திட்டங்களின் கண்காணிப்பு குழுவின் ஆய்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலக்டர் சந்தீப் நாத்தூரியின் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. அந்த கூட்டத்திற்கு சசிகலா புஷ்பா எம்.பி வருவதாக இருந்தது.
இந்த கூட்டத்திற்கு உடல்நிலை சரியில்லதாக காரணமாக சேர்மேன் எம்.பி நட்டர்ஜி கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தார். இதனிடையே இந்த கூட்டம் இன்று காலை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த தகவல் சசிகலா புஷ்பா எம்.பிக்கு தெரியப்படுத்தவில்லையாம்.
இன்று காலை இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சசிகலாபுஷ்பா எம்.பி விமானம் மூலம் வந்தவர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளார். அங்கு கலக்டெர் சந்தீப் நந்தூரி இல்லையாம். அலுவலக அதிகாரிகள் சசிகலாபுஷ்பாவிடம் கூட்டம் ரத்து செய்யப்பட்டதை தெரிவித்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த சசிகலாபுஷ்பா கலக்டெர் எங்கே என்று கேட்டிருக்கிறார். அவர் அலுவல் சம்பந்தமாக வெளியே சென்றுள்ளார் என்றார்கள்.
மீட்டிங்'னு சொல்லிட்டு கலெக்டர் ஏன் வெளியே போக வேண்டும் இங்கேயே இருக்க வேண்டியதுதானே.என்னை அவமானப்படுத்துகிறீர்களா, கலக்டெர் இங்கே உடனே வரவேண்டும் என்று சொல்லிவிட்டு அங்கெ தர்ணா போராட்டம் நடத்தியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. அப்போது அங்கு வந்த மாவட்ட ஊரக திட்ட அலுவலகரான கணபதி சசிகலா புஷ்பாவிடம் போராட்டத்தை கைவிடுங்கள் நாம் அனைவரும் என் தலைமையில் கூட்டத்தை நடத்துவோம் வாருங்கள் என்று அழைத்திருக்கிறார்.
அதற்கு சசிகலாபுஷ்பா கோபமானதோடு ஒரு ஓ.ஏவின் கீழ் நடக்கும் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளமாட்டேன். இது மோடி அரசின் திட்டம் அதை நினைவில் கொள்ளுங்கள் என்றவர் கலெக்டரை உடனே வரச்சொல்லுங்கள் அப்போதுதான் நான் போராட்டத்தை கைவிடுவேன் என்றபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதை அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் அங்கே வந்தார். அவர் எம்.பியை சமாதானப்படுத்தினார். அதன்பின் சசிகலாபுஷ்பா ஆய்வு கூட்டத்தில் நான் கலந்துகொள்ளமாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றார். இதை அடுத்து மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட அலுவலர் கணபதியை சசிகலா புஷ்பா ஒருமையில் பேசியதாக தகவல் பரவியதை அடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து பணியாளர்களும் திடீரன்று மதியம் தர்ணாவில் ஈடுபட்டனர். சசிகலாபுஷ்பா எம்.பி தான் பேசியதற்காக வருத்தம் தெரிவிப்பதோடு, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.