தமிழ்நாடு முழுவதும் பருவ மழை பெய்துவருகிறது. குறிப்பாக, சென்னையில் சாலை எங்கும் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்குக் கனமழை பெய்திருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களைச் சந்தித்து நிவாரணம் வழங்கிவருகிறார்கள். இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை இன்று (12.11.2021) சசிகலா பார்வையிட்டார்.
அதன்படி நிவாரண பொருட்கள் வழங்க சென்னை கே.கே.நகர் நாகாத்தம்மன் ஆலையம் அருகே உள்ள குடிசை மாற்று வாரிய பகுதிக்கு சசிகலா வந்தார். அங்கு அவரது ஆதரவாளர்கள் சரியான முன்னேற்பாடு செய்யாததால் மக்கள் நெரிசலில் சிக்கி கொண்டனர். பத்து பேருக்கு மட்டும் பொருட்களை கொடுத்துவிட்டு சசிகலா சென்றுவிட்டார். பின்னர் அங்கிருந்த பால் பாக்கெட், பிரியாணியை எடுக்க மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். பால் பாக்கெட்டுகள் உடைந்து மழை நீரில் கலந்து ஓடியது. மேலும் நெரிசலால் வயதான பெண்மணிகள் கீழே விழுந்ததால் சிலருக்கு காயமும் ஏற்பட்டது. சசிகலா ஆதரவாளர்களின் முறையான ஏற்பாடு இல்லாததே இதற்கு காரணம் என பொது மக்கள் நொந்து கொண்டனர்.