Published on 17/02/2021 | Edited on 17/02/2021
பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கிய, 2017- ஆம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்றும், இன்றைய அரசியல் சூழலில், இவ்வழக்கு விசாரிக்கப்படாமல் இருந்தால், அரசியலில் பாதிப்பு ஏற்படும் என்றும், உடனே விசாரிக்கக் கோரியும், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4- வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு மார்ச் 15- ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.