நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி படுகொலையில் பல கட்ட ஆய்வுகளுக்கு பின்பு குற்றவாளியை வளைத்த போலீஸ், அவனை தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது. அவன் பாளையைச் சேர்ந்தவன். திருமணமாகாத அவன், ஏற்கனவே 2015ல் தன் பக்கத்து வீட்டுக்காரரின் காரை தீ வைத்து எரித்ததோடு, அவர்களை வன்கொடுமை வழக்கில் அலைய வைத்தவன்.
உமாமகேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் மிகவும் தெரிந்தவன். அதோடு பினாமி சொத்துக்கள் பதிவு, பண விவகாரம் தொடர்பாக அவனுக்கும் உமாமகேஸ்வரிக்கும் பேச்சும் பிரச்சனையும் உள்ளது. தனியொரு மனிதனாகவே சுற்றித் திரிபவன். கொலைச் சம்பவத்திற்குப் பின்பு சந்தேகத்தின் பேரில் அவனை வலைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், அவனது செல் நம்பரைப் பெற்று விசாரணை டீம் அவனை விட்டுப் பிடித்தது. இதற்கு முன்பும், கடந்த மாதம் மற்றும் சம்பவம் நடந்த நாட்களின் முன்பு அவன் உமாமகேஸ்வரியிடம் அடிக்கடி செல்லில் பேசியிருக்கிறான். பேச்சுக்கள் அரைமணி வரை கூட நீண்டிருக்கிறது. தவிர எப்போதும் ஸ்கார்பியோ காரிலேயே சுற்றி வருவபவன். கொலைச் சம்பவத்திற்கு இரண்டு நாள் முன்பு கூட மேயரின் வீட்டுத் தெருவில் அவன் கார் போனது பதிவானது எங்கள் வசமிருக்கிறது.
ஆனால் சம்பவத்தின்போது கூர்மையான கத்தியுடன் தான் போயிருக்கிறான். வழக்கமாகக் காரில் சென்றவன் காரை சாலையின் வெகு தூரத்தில் நிறுத்திவிட்டு (காபி பார் பக்கம்) சற்று தொலைவிலிருக்கும் உமாமகோஸ்விரியின் வீட்டுக்கு நடந்தே போயிருக்கிறான். வந்திருப்பது தெரிந்தவன் என்பதால் தான் உமாமகேஸ்வரி கதவைத் திறந்திருக்கிறார். வந்தவனுக்கு சொம்பில் குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்திருக்கிறார். அதைக் குடித்தவன் அவர்களோடு பேசியிருக்கிறான். அவனது கை ரேகைப்பட்ட சொம்பின் தடயமும் போலீஸ் வசம் சிக்கியிருக்கிறது. பேச்சுவார்த்தை முடியாமல் முற்றிப் போனதால் தான் சம்பவத்தை நடத்தியிருக்கிறான்.
அந்தப் பகுதியின் செல் டவரில் ஒருமாதமாகப் பதிவான நம்பர்களை நாங்கள் ட்ரேஸ் செய்ததில் உமாமகேஸ்வரியின் நம்பரோடு பல தடவை அவன் வெகு நேரம் பேசியது தெரிய வந்த பிறகே அவனை தனி டீம் சுற்றி வளைத்தது என தெரிவிக்கின்றனர். தவிர இவனோடு வேறு சிலரும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்று விசாரணையும் போய்க் கொண்டிருக்கிறது. விரைவில் ஆதாரங்களுடன் அவன் ஆஐர்படுத்தப்பட்டலாம் என கூறப்படுகிறது.