Skip to main content

சேலம் சிறையில் விசாரணை கைதி தற்கொலை முயற்சி!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

salem prisoner in critical condition

 

சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர் கொசுவர்த்தி சுருளைத் தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

 

பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் மாரிமுத்து (29). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் ஆயில்பட்டி காவல்நிலைய காவல்துறையால் கைது செய்யப்பட்ட இவர், பத்து நாள்களுக்கு முன்பு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 


இந்த நிலையில் மே 12ம் தேதி இரவு, மாரிமுத்து திடீரென்று கொசுவர்த்தி சுருளைத் தின்று தற்கொலைக்கு முயன்றார். உடன் இருந்த மற்ற விசாரணை கைதிகள் அவரை மீட்டு சிறை மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர் சிகிச்சைக்காக அவரை, மத்திய சிறைக் காவலர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு காவல்துறை பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


மாரிமுத்து தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து சிறை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம், சிறை கைதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்