Published on 05/09/2019 | Edited on 05/09/2019
நீலகிரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்படுவர். நீலகிரியில் ஏற்கனவே மழை வெள்ளம் காரணமாக கற்பித்தல் பணிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு இன்னல் ஏற்படும் நிலையை ஆசிரியர்கள் மீண்டும் ஏற்படுத்தக்கூடாது என மாவட்ட கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.