Published on 03/09/2020 | Edited on 03/09/2020
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து உயர்ந்துள்ளது.
இன்று (03/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,522 கன அடியில் இருந்து 17,937 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.50 அடியாகவும், நீர்இருப்பு 52.08 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. டெல்டா பாசனத்தேவைக்காக காவிரியில் 9,000 கன அடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து வினாடிக்கு 16,000- லிருந்து 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது.