Published on 11/02/2020 | Edited on 11/02/2020
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரி ஏய்ப்பு புகாரில் 'பிகில்' படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் கல்பாத்தி அகோரம் குழுமத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், ஏ.ஜி.எஸ் சினிமா உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜய் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் கணக்கில் வராத ரூபாய் 77 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது.
அதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனால் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியனின் ஆடிட்டர்கள் ஆஜராகினர்.