Published on 10/11/2018 | Edited on 10/11/2018

கடந்த 2016-ஆம் ஆண்டு சேலம்-சென்னை ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு வடமாநில கொள்ளையர்களால் 5.78 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் மெஹர் சிங் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் திருடப்பட்ட மொத்தத் தொகையான 5.78 கோடி ரூபாய் என்ன ஆனது என்பது பற்றிய விசாரணையில் மொத்த ரூபாயும் செலவு செய்ததாக கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.
பணமதிப்பிழப்புக்கு முன்பாகவே 5.78 கோடி ரூபாய் செலவு செய்ததாக கொள்ளையர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.