Published on 20/12/2018 | Edited on 20/12/2018

நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டுள்ளது. தியாகராயர் நகரில் உள்ள இந்த அலுவலகத்திற்கு இன்று காலை வந்த விஷால் பூட்டை திறந்து அலுவலகதிற்கு செல்வேன் என்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், பூட்டை உடைப்பதற்கு அனுமதி மறுத்தனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். சங்க விவகாரங்களில் போலீசார் தலையிட வேண்டாம் என்று போலீசாரிடம் அவர் கூறினார்.