தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கலப்படப் பால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் பாலின் தரம் குறித்து வட்டாட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகரப் பகுதிக்கு கயத்தாறு, விளாத்திகுளம், புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகளவில் அதிகாலையில் பேருந்து மற்றும் தனியார் வாகனங்களில் பசும்பால் கொண்டு வரப்பட்டு விற்கப்படுகிறது. இந்த நிலையில் இப்படிக் கொண்டு வரும் பாலில் தண்ணீர் மற்றும் கெமிக்கல் கலந்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
புகாரைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் விற்கப்படும் பாலின் தரத்தை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இன்று உணவு பாதுகாப்பு துறையினர் விற்பனைக்கு வந்திருந்த பால் கேன்களில் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.