வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜானி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வேலூர் மத்தியச் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த ஜானி, கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார். ஜானியைப் பிடிக்க தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஜானியின் மனைவி ஷாலினி தனது கணவரான ஜானிக்கு மறைமுகமாக அனைத்து உதவிகளும் செய்து வருவதாக காட்பாடி போலீசாருக்குப் புகார் சென்றது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஷாலினியை போலீசார் கைது செய்து வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே மே 29ஆம் தேதி ஷாலினிக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அப்போது தினந்தோறும் அவர் காட்பாடி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. ஜாமினில் வெளியே வந்த ஷாலினி தனது தந்தையின் வீட்டில் இருந்துள்ளார்.
மே 30ஆம் தேதி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், அவர் வராததால், காட்பாடி போலிஸார் ஷாலினியைத் தேடி சென்றபோது அவர் வீட்டில் இல்லை. வீட்டில் தந்தையும் - பேத்தி மட்டுமே இருந்துள்ளனர். இதனால் திரும்பி வந்துள்ளனர்.
ஜானி - ஷாலினி தம்பதிக்கு 6 வயதில் குழந்து உள்ளது. குழந்தையை விட்டுவிட்டு ஷாலினி தலைமறைவாகியுள்ளார். இதனால் ஷாலினியின் தந்தை குழந்தையைப் பராமரிக்க முடியாத காரணத்தால் குழந்தையை அரியூர் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்துள்ளார். குழந்தை தாயைப் பிரிந்த ஏக்கத்தினால் உணவு உண்ணாமல் அழுதுகொண்டே இருக்கிறதாம். தங்களின் குழந்தை நிலையை யோசிக்காமல் அனாதையாக விட்டுவிட்டு ஷாலினி தலைமறைவாகியுள்ளார்.
குழந்தையை விட கணவரே முக்கியம் எனத் தலைமறைவாகியுள்ளார் ஜானியின் மனைவி. ஜானி - ஷாலினியை போலீசார் தேடி வருகின்றனர்.