நாகா்கோவில் வடசேரி அரசு நிதி உதவியுடன் நடக்கும் ஓரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவா் லாரன்ஸ். அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா்கள் மூன்று போ் மாணவிகளுக்கு பாலியியல் தொந்தரவு செய்வதோடு அந்த மாணவிகளை வித விதமாக செல்போனில் படம் புடித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை ஆசிரியா் லாரன்ஸ் தட்டிக்கேட்டு அந்த ஆசிரியா்களுடன் தகராறு செய்து வந்தார். மேலும் இது சம்மந்தமாக தலைமையாசிரியா் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் அந்த ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் லாரன்ஸ் அந்த மாணவிகளின் பெற்றோர்களிடம் கூறியதால் பெற்றோர்கள் பள்ளியில் வந்து தகராறு செய்ததோடு காவல் நிலையம் வரை பிரச்சினை சென்றது.
இதனால் பள்ளியின் பெயரை லாரன்ஸ் கெடுத்துவிட்டதாக கூறி பள்ளி நிர்வாகமும் தலைமையாசிரியரும் லாரன்ஸ்க்கு நெருக்கடி கொடுத்து வந்ததால் அதை சமாளிக்க முடியாத அவா் விருப்ப ஓய்வு பெற்றார். மேலும் அவா் விருப்ப ஓய்வு பெற்றதற்கான பணப்பலனையும் பள்ளி நிர்வாகம் வாங்கி கொடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கஷ்டப்பட்டு வந்த லாரன்ஸ் பணப்பலனை நம்பி வட்டிக்கு கடன் வாங்கினார். 15 மாதமாக கடன் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவா்கள் லாரன்ஸ்க்கு நெருக்கடி கொடுத்தனா். இந்த நிலையில் பணப்பலனை கொடுக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லையாம். இதனால் விரக்தி அடைந்த லாரன்ஸ் இன்று கலெக்டா் அலுவலகத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பார்த்து தடுத்து நிறுத்தி பூச்சி மருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனா். மேலும் லாரன்ஸை பிடித்து விசாரித்து வருகின்றனா். இந்த சம்பவம் கலெக்டா் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.