Published on 24/08/2019 | Edited on 24/08/2019
புதுச்சேரியில் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகளால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக கூறி அதிகாரிகள் கடைகளை அகற்றி வருகின்றனர். இதற்கு சாலையோர கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சாலையோர கடைகளை அடித்து நொறுக்கி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நாசப்படுத்தும் காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்து அனைத்து சங்கங்கள் சார்பில் சாலையோர வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்று முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடைபெற்றது. இதில் ஏராளமான தெருவோர வியாபார தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.