Published on 19/05/2022 | Edited on 19/05/2022
![Tomato price touches 100!](http://image.nakkheeran.in/cdn/farfuture/QfF5F501wJJfknJrNUlqJWDM8ZtzQJE6Ufp0Cq910Ok/1652925751/sites/default/files/inline-images/ASDFSDFSFSF.jpg)
சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய் அதிகரித்து கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தொடர் மழை பொழிவு, வரத்து குறைவு ஆகிய காரணங்களால் கடந்த 20 நாட்களாகவே தக்காளி விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரு கிலோ தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே திண்டுக்கல் சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை தொட்டிருந்ததை தொடர்ந்து கோயம்பேட்டிலும் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.