காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் தற்கொலை செய்துகொள்வோம் என கூறிய அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணனுக்கு, டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நண்பர் நவநீதகிருஷ்ணனுக்கு தற்கொலை செய்து கொள்வது கஷ்டமாக இருந்தால் நான் கயிறு, விஷம் தயாராக வைத்துள்ளேன். எதற்காக சொல்கிறேன் என்றால் அவருக்கு எதில் தற்கொலை செய்து கொள்வது என கஷ்டாமாக இருந்தது என்றால் விவசாயிகள் பெயரை சொல்லி விளையாட வேண்டாம் என்பதற்காக தயாராக வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.