தூத்துக்குடியில் மே 22-ந் தேதி அன்று காவல்துறையினர் கொலைவெறியுடன் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த தமிழரசன் சுட்டுக் கொல்லப்பட்டார். புரட்சிகர முன்னணியைச் சேர்ந்த இவர் திருமணம் ஆகாதவர்.
இந்நிலையில் மதுரை வக்கீல் சரவணக்குமார், கல்லுப்பட்டியைச் சேர்ந்த முருகன், மணி, சமயன், அருப்புக்கோட்டை கோவேந்தன், தூத்துக்குடி வன்னி பெருமாள் ஆகியோர் தூத்துக்குடிக்கு சென்று பொதுமக்களிடம் 22-ந்தேதி சம்பவம் குறித்த விவரங்களையும், செய்திகளையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தமிழரசன் வீடு உள்ள குறுக்கு சாலையிலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்தனர்.
அப்போது ஒட்டப்பிடாரம் காவல்நிலைய போலீசார் அங்கு சென்று அவர்களை கைது செய்தனர். 31அம் தேதி அதிகாலை 2 மணிக்கு வீளவிட்டான் பகுதியில் போலீசார் திடீரென்று சோதனை நடத்தி சந்தான முத்து, பாலாசிங், பார்த்திபன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இப்படி தொடர்ந்து இரவோடு இரவாக போலீசார் சோதனை நடத்தி இளைஞர்களையும், ஆண்களையும் கைது செய்வதாக அப்பகுதி மக்கள் போலீசார் மீது குற்றம் சாட்டுகின்றனர். போராட்டத்தை கைவிட்டும் ஏன் இப்படி செய்கிறார்கள். மிரட்டுகிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் அமைச்சர்களும், தமிழக அரசும் அமைதி திரும்புகிறது. பொதுமக்கள் நிம்மதியாக இருக்கின்றனர் என்று வேஷம் போடுகின்றனர் என்று சொல்லி கவலையடைகின்றனர்.
- சூர்யா